Saturday, 22 December 2012

     குதியாளம் போட்டுக் கொண்டு ஓடி வந்தான் பேரன். ஒரு பறவை சிறகை விரித்துக் கொண்டு மேலும் கீழும் டைவ் அடிப்பது போலவும்  இலை உதிர் காலம் முடிந்தபின் தளிர்க்கும் வசந்தகால விருட்சம் போலவு அவன் எகுறிக் குதித்து சந்தோஷக் குழல் ஊதினான். என்றும் இல்லாத அளவுக்கு அவன் முகம் நீா் நிறைந்தோடும் ஓடை போல ததும்பிச் செழித்திருந்தது. இரண்டு கைகளின் விரல்களையும் மடக்கிப் பெருவிரல்களை மட்டும் நீட்டிபுல்லாங்குழல் போல வைத்துக் கொண்டு வாயில் வைத்துப் பீப்பீ என ஊதினான்.

     ஏதோ காசுக்குத்தான் அடிப் போடுகிறான் என்று நினைத்த நான் என்ன வேணும் என்றேன்.

     என் பேச்சை செவி மடுக்காதவனாய் மேலும் மேலும் தவ்விக் கொண்டிருந்தான். ஏதோ ஒன்றால் ஈர்க்கப் பட்டிருக்கிறான் என்பதை மட்டுந்தான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

அவன் ஆட்டபாட்டம் எல்லாம் முடிந்து அமைதி அடைந்த  பிறகு மெதுவாய்க் கேட்டேன். என்னடா இன்னக்கி இம்புட்டுத் தவ்வாளம் போடுற?

     உடனடியாக அவன் சொன்னான் இன்னக்கி கரண்டு போகல தாத்தா.

1 comment:

  1. தீவாளி, பொங்கல் போல கரன்ட் இருக்கும் நாட்களுக்கும் ஒரு விழா கொண்டாட வேண்டும் போலிருக்கிறது. கடந்த தீவாளி அன்று நான் தேனிக்கு வந்த போது அந்த நல்ல நாளில் கரன்ட் போக வில்லை. அது சென்னையில் இருக்கும் எனக்கு சாதரணமாக பட்டாலும் விழா தந்த மகிழ்சியை விட கரன்ட் போகாமல் இருந்ததே வீட்டில் குதூகலத்தை தந்ததை கண்டேன். கரன்ட் வரமா? சாபமா? ஒரு பட்டிமண்றம் வைத்தாலென்ன. நடுவராக வேண்டுமானல் EB வயர்மேனை கூபிடலாம்.

    ReplyDelete