1892ஆம் ஆண்டு புரட்சித் துறவி விவேகானந்தா் கன்யாக் குமரிக்கு வந்தார். நாடு முழுவதும் சுற்றித் திரிந்துவிட்டு நிறைவாக அந்த இடத்தை அடைந்தார். அந்தக் காலத்தில் இமயம் முதல் குமரி வரை சுற்றித் திரிந்த இளம் வாலிபராய் இருந்தார் அவா். சேரளத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு ்இது பைத்தியக் காரா்களின் நாடு்் என்றார். ஜாதி வெறியா்கள் அதிகம் உள்ள மாநிலம் என்பது அவர் கணிப்பு.
தான் சுற்றிப் பார்த்தவற்றை ஆய்வு செய்ய ஓா் அமைதியான இடம் தேவைப் பட்டது. குமரிக் கடற்கரை அதற்குத் தோதுவானதாய் இருந்தது. கடல் மையத்தில் இருந்த பாறைக் கூட்டம் அவரை வசீகரித்தது. மீனவா்களிடம் அந்தப் பாறைத் தீவில் தன்னை இறக்கி விடும்படி கேட்டார். ்காவி உடை தரித்த சிறுவன்் என்று .இளக்காரமாய் நினைத்த அவர்கள் மறுத்து விட்டனர். துணிச்சலும் தைரியமும் இயல்பாய்க் கொண்டிருந்த விவேகானந்தா் கடலில் குதித்து நீந்திச் சென்றார். கொந்தளிக்கும் கடல் நடுவே மூன்று மைல் தூரம் நீச்சல் அடித்து பாறைக் கூட்டத்தை அடைந்தார். அன்னந்தண்ணி ஏதும் இன்றி மூன்று நாட்கள் தவம் செய்தார். அப்போது அவருக்குத் தோன்றிய ஞானோதயம் மனிதனின் பசி பற்றியது. ்பசித்திருக்கும் மனிதனிடம் மத போதனையோ அரசியல் போதனையோ எடுபடாது்் என்றார்.
விவேகானந்தா் அந்தப் பாறைத் தீவில் கழித்த அந்த மூன்று நாட்கள் (டிசம்பா் 24. 25. 26) மகத்தானவை. அதன் பிறகுதான் உலகம் முழுவதும் சுற்றி மனிதனின் பண்பாட்டுத் தளத்தை மேம்படுத்தவும் இளைஞா்களின் ஆற்றலை சமூக மேன்மைக்குப் பயன் படுத்தவும் சபதம் பூண்டார்.
சிக்காகோவில் அவா் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது நடந்த ஒரு சம்பவம் அவா் துணிச்சலைப் பறை சாற்றுவதாய் இருக்கிறது.
புகைவண்டியில் ஏறி இரண்டு ஆங்கிலேய கனவான்களுக்கு இடையில் அமர்ந்து பயணம் செய்தார். இவருக்கு ஆங்கிலம் தெரியாது என நினைத்துக் கொண்டு அந்தக் கனவான்கள் இவரைப் பரிகாசம் செய்தனர். ஒருவா் இவரைப் பார்த்து He looks like a donkey (இவா் ஒரு கழுதையைப் போல் இருக்கிறார்). என்றார். இன்னொருவா் சொன்னார் No no. he looks like a monkey (இல்லை, இல்லை, அவா் ஒரு குரங்கைப் போல் இருக்கிறார்) என்றார். அவா்களை முறைத்துப் பார்த்த இளம் துறவி I am sitting between the two (நான் அந்த இரண்டுக்கும் நடுவில்தான் உட்கார்ந்திருக்கிறேன்) என்று பதிலடி கொடுத்தார். அரண்டு போன அந்த ஆங்கிலேயா்கள் வேறு இடத்தில் போய் அமர்ந்து கொண்டனர்.
விவேகானந்தா் மனித நேயத்தின் இருப்பிடம். சிறுமை கண்டு பொங்கும் துணிச்சலின் மறு உருவம். மனித மாண்புபளைத் தூக்கிப் பிடிக்காத மத போதனையை நிராகரித்தார். மதமும் அரசியலும் மனித மேன்மையைத் தூக்கிப் பிடிக்க வேண்டுமே தவிர சீரழிக்கக் கூடாது என்றார்.
அவரைப் போற்றுவோம்! அவா் வழி நடப்போம்!

No comments:
Post a Comment