மனித இனம் வெட்கித் தலை குனியக் கூடிய அந்த நிகழ்வு நடந்தே விட்டது. ஆம். கடந்த 16-12-12 அன்று டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட மருத்துவ மாணவி இன்றுஅதிகாலை 2-15 மணிக்கு சிங்கப்பூா் எலிசபெத் மருத்துவ மனையில் இறந்து போனார். இன்று மாலை அவள் உடல் இ்நதியாவுக்குக் கொண்டு வரப் படுகிறது.
அன்று இரவு 9-30 மணிக்கு ஒடும் பஸ்ஸில் இந்த கோரம் நடந்திருப்பது கற்பனைக்கு எட்டாத வன்முறை. மனித குல வரலாற்றின் கருப்பு அத்தியாயங்கள் குவிந்து கிடக்கும் குப்பை வௌியில் அன்றைய தினம் தனது தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறது.வாழ்வின் சகல சௌபாக்கியத்தோடும் வாழத் துடித்த ஒரு மனித ஜீவி ஆணாதிக்க வன்முறைக்கு இலக்காகி ஏதுமற்ற ஜடமாகிப் போனது.
ஆறு போ் கொண்ட மனிதக் கசடுகளால் அந்தப் பெண் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப் பட்டாள். அவளின் பாலியல் உறுப்பு கிழிந்து தொங்கிவிட்டது.மார்பகங்கள் நைந்து புண்ணாகிவிட்டன. கர்ப்பப் பை ஊதிப் பெருதி வலுவிழந்து விட்டது. ஒரு மனிதப் பெண் உடம்பு சுயமிழந்து சின்னாபின்னமாகிச் சிதைந்தது.
அந்த மனிதக் கொடுசூரிகளுக்கு என்ன தண்டனை தருவது என நாடு பூராவும் விவாதம் நடந்து ொண்டிருக்கிறது. (மனித மிருகங்கள் என்று சொல்வது பொருத்தம் இல்லை. மிருகங்கள் எதிர் பாலினத்தை சிதைத்து சின்னாபின்னமாக்குவதில்லை.) கோடான கோடிப் போ் மரண தண்டனைளயத் தேர்வு செய்கின்றனா்.
அது பொருத்தமற்றது என்பது என் மனைவியின் வாதம். அவா்களின் பாலியல் உறுப்பை அறுத்து அவா்கள் கண்ணுக்கு முன்னாலேயே காகத்துக்கு இரையாக்கிவிட வேண்டும் என்றிறார். எனக்கும் கூட இது சரியெனவே பட்டது.
அந்தப் பெண்ணின் பெயரை எந்த ஊடகமும் இதுவரை வௌியிடவில்லை. இதற்குப் பின்னால் ஏதும் மர்மம் இருக்கிறதா என்று தொியவில்லை. அவளுடன் பயணம் செய்த அவள் காதலன் என்ன ஆனான் என்றும் கொியவில்லை. இந்த வன்முறையில் பெரிய அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ ஈடுப்பட்டிருப்பார்கயளா என்று தோன்றுகிறது.
2012அம் ஆண்டின் மிகப் பெரிய சோக நிகடழ்வு இந்தச் சம்பவம்தான்.
ஆண்களை அகற்றுங்கள்........................................................
அ்ணடவௌியெங்கும்...................................................
ஆதிக்கப் புன்னகையோடு -------------------------------------
அராஜகப் பயணம் செய்யும் ------------------------------------
ஆண்களை அகற்றுங்கள்.
வேதனை வழுதுகளை
உள்வாங்கி உள்வாங்கி -------------------------------------------
உதிரம் உறைந்து கிடக்கும் -----------------------------------
பெண்களைக் காப்பாற்ற ---------------------------------------
ஆண்களை அகற்றுங்கள்.
No comments:
Post a Comment