Sunday, 14 July 2013

உதிர்ந்து போனது.

15 ஜூலை 2013 திங்கள்

நூற்றைம்பது ஆண்டுகால சகாப்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. தந்தி என்ற அற்புதமான விஞ்ஞான இயக்கம் நேற்று இரவு ஒன்பது மணிக்கு இந்தியாவில் தன் ஜீவிதத்தை நிறுத்திக் கொண்டது. எண்ணற்ற இன்பங்களையும் துன்பங்களையும் சுமந்து சென்று கோடானு கோடி இதயங்களைப் புரட்டிப் போட்ட  அந்த அற்புத சாதனம் மனித இனத்தின் தொலைத் தொடர்பு வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் வீழ்ந்து போனது. மனித விருட்சக் கொப்புகளில் இருந்து அது உதிர்ந்து போனது.

உதிர்வு என்பது அழிவு அல்ல. இலைகளும் பூக்களும் உதிர்கின்றன. மண்ணோடு ஐக்கியப் பட்டு மக்கி உரமாகின்றன. ஆகவே உதிர்வு என்பது வளா் சிதை மாற்றமே அன்றி அழிவு அல்ல.

தாமஸ் ஆல்வா எடிசனால் கண்டு பிடிக்கப் பட்டு தந்திக் கம்பிகள் வழியே பயணப் பட்டு (ஒரு கம்பி வழியே ஒரு செய்தி என்று அரம்பித்து படிப்படியாய் வளா்ந்து ஒரே கம்பி வழியாய் நூறு செய்திகள் அனுப்பும் அளவிற்கு வளா்ந்து) உலகையே வலம் வந்து வானுக்கும் பூமிக்குமாய் நீக்கமற விரவி நின்ற அந்த இயக்கம் இன்று இந்தியா்களிடம் இருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டது.

அரசியல் பண்பாடு மனித குல வளர்ச்சி என்ற எல்லா எல்லைகளையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து பெரும் சேவை ஆற்றி இருக்கிறது ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்த இந்தியப் புரட்சியாளா்கள் தந்திக் கம்பிகளை அறுத்து ஆங்கிலேயரின் அராஜகச் செய்திகளை முடமாக்கினா். விடுதலை பெற்ற இந்தியாவிலும் கூட ஊழலுக்கு எதிரான மக்கள் ஜனநாயகப் புரட்சிக்குப் பேருதவி செய்திருக்கிறது. முதலமைச்சா் எம்ஜியாரால் கேலிச் சித்திரம் வரையத் தடை விதிக்கப் பட்ட போது எழுத்தாளா்களும் வேலை நியமனத் தடைச் சட்டம் வந்த போது இளைஞா்களும் தந்திகள் அனுப்பி களப் போராளிகளுக்குப் பேருதவுி செய்தனா்.

வாழ்வின் உள்ளும் புறமுமாய் இருந்து
லட்சிய ஈடேற்றத்தை நிறைவேற்றிய
தந்தியே!
உன் முதிர்வுக்கு
எுங்கள் மனமுவந்த வாழ்த்துக்கள்.