Friday, 22 February 2013

உணா்ச்சி நிலை தோற்க......

ஜூன் மாதம் அகில உலக தடகளப் போட்டிகள் சென்னையில் நடைபெற இருந்ததை தமிழ் நாடு அரசு ரத்து செய்துள்ளது. பிரபாகரனின் 12 வயது சிறுவன் பாலச்தந்திரன் கடும் சித்திரவதைக்குப் பின் கொலை செய்யப் பட்டதை சேனல்4 அம்பலப் படுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. பாலச் சந்திரன் கொலை தமிழ் நெஞ்சங்களை ரத்தக் கண்ணீா் வடிக்கச் செய்யக் கூடிய சம்பவம். இரண்டாவது உலக யுத்தத்தின் போது ஜப்பானியா்கள் சீனக் குழந்தைகளை இதே போல்தான் சித்திரவதை செய்து கொன்றார்னள். சீன சிறுவன் ஒருவனை உயிரோடு அறுத்து மருத்துிவப் பரிசோதனை நடத்திய கொடூரம் எல்லாம் நிகழ்நதிருக்கிறது. ஜப்பானியா்கள் செய்ததற்கு நிகரான சித்திரவதையை சிஙு்கள இனவாத அரசும் செய்திருக்கிறது் ஆகவே இந்த நடவடிக்கை சரிதான் என்று தமிடிகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டன. அதிமுக எது செய்தாலும் எதிர்ப்பது என்ற கொள்கை உடைய திமுகவும் கூட அதற்கு மறைமுகமான ஆதரவு தந்திருக்கிறது. காங்கிரஸ் மட்டும் இன்னும வாய் திறக்க வில்லை. திராவிடக் கட்சிகளோடு சி பி ஐ பார்வட் பிளாக் ஆகியவையும் மழுமனதோடு வரவேற்றுள்ளன.

ஆனால் சி பி ஐ (எம்) அதை நிராகரித்துள்ளது. மாநிலச் செயலாளா் ஜி ராமக் கிருஷ்ணன் பேசும்போது ராணுவம் என்பது வேறு, விளையாட்டு என்பது வேறு என்று பேசியுள்ளார்.

இதையும் கொஞ்சம் யோசிக்க வேண்டியுள்ளது. பரம எதிரியான பாகிஸ்தானை விளையாட அனுமதிக்கும் போது எல்லைப் பகுதியில்சதாசர்வ காலமும் இடைஞ்சல் படுத்திக் கொண்டிருக்கும் வங்க தேச விளையாட்டு வீரர்களை ஏற்றுக் கொள்ளும் போது இலங்கையை ஏன் நிராகரிக்க வேண்டும்? தமிழன் என்ற உணர்ச்சி நிலைக் கோட்பாட்டை விட்டுவிட்டு மனிதன் என்ற உணர்வு நிலைத் தாக்கத்தோடு பரிசீலித்தால் விளையாட்டுப் போட்டிகளை ரத்து செய்ய வேண்டியதில்லை என்பது புலனாகும்.

எத்தனையோ சிங்களா்கள் பாதிக்கப் பட்ட தமிழர்களைப் பாதுகாத்துள்ளார்கள் என்பதை பலரு வௌிப் படுத்தியுள்ளனா். சிங்கள மக்கள் நம் எதிரிகள் அல்ல. இலங்கை பாசிச அரசும் கொடுங்கோலன் ராஜபக்ஸவும்தான் மனிதகுல எதிரிகள். அவர்களை வேரறுக்க மனித நேயக் கோட்பாட்டாளர்கள் ஒன்றிணைய வேண்டும். சிங்கள முற்போக்குவாதிகளையும் இணைத்துக்  கொள்ளவேண்டும். 

உணர்சிசிக்கும் உணா்வு்ககும் இடையிலான போராட்டத்தில் உணா்ச்சியை ஜெயிக்க வைத்துவிடக் கூடாது என்ற மார்க்ஸிஸ்ட் கட்சியின் நிலைபாடு சரியானதுதான் என்று தோன்றுகிறது.

Thursday, 14 February 2013

காதல் என்பது.......

இ்னறு காதலா் தினம். மனமும் உணா்வும் ஒன்றிய இருபால் இளைஞா்கள் எவ்விதத் தடங்கலும் இன்றி சந்தோஷமாய் வாழ வேண்டும் என்ற கருத்தாக்கம் கொண்டது. அவா் இவரை விரும்பும் போது இவா் அவரை விரும்பா விட்டால் ஒதுங்கிக் கொள்வதே உத்தமம். இப்போதெல்லாம் இளைஞா்கள் முதிர்ச்சியுடன் நடந்து கொள்வதில்லை. உணா்வு நிலை அழிந்து உணா்ச்சிக்கு பலியாகி உன்மத்தம் கொள்கின்றனா்.

வினோதினியின் சங்கதியும் அப்படிப் பட்டதுதான். காரைக்காலைச் சோ்ந்தவா் வினோதினி. பொறியியல் தேரி சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவா். ஒருதலையாய்க் காதலித்த சுரேஷை அவள் நிராகரித்த போது அவன் மிருகத்தனமாய் அவள் மேல் திராவகம் ஊற்றிக் கொன்றுவிட்டான். மூன்று மாதகால உயிர்ப் போராட்டத்துக்குப் பின்பு அந்த மரணம் நிகழ்ந்திருக்கிறது. பெற்றோருக்கு ஒரே மகள் அவள். வாச்மேன் வேலை செய்த அவள் தந்தைக்கு யாரொருவரும் துணை இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒருவேளை நிவாரண உதவி கிடைக்கலாம். அந்த இழப்பை ஈடுி செய்ய உதவாது. அவள்  தந்தைக்கு அரசு வேலை கிடைத்தால் நல்லது.

காதல் என்பது மனமும் உணா்வும் கலந்த ஓா் அமானுஷ்ய சக்தி. மனதோடு மனம் பொருந்திப் போகக் கூடிய ஆத்மப் பிணைப்பு ஜாடியும் மூடியும் போல. அதை உடலின் வாஞ்சைக்கு அடிபணியச் செய்து உருகிப் போவதும் அல்லது எதிர்ப் பாலை உருக்குலையச் செய்வதும் கயமைத் தனம். உடனடி தண்டனை நிறைவேற்றப் பட வேண்டும். திராவக விற்பனை கட்டுக்குள் இருக்கும் படி கண்காணிக்க வேண்டும். உரிமம் இல்லாமல் விற்கப் பட்டு இருந்தால் விற்பனையாளன் மீதும் தண்டனைக் கரம் நீள வேண்டும். இன்றைய பண்பாட்டுச் சூழலைக் கருத்தில் கொண்டு காதலா் தினக்கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்.

டெல்லி மாணவி நிர்பய வுக்குப் பிறகு மீண்டும் ஒரு படுகொலை நிகழ்த்தப் பட்டுள்ளது.

Oh my earth!

Monday, 11 February 2013

புதிய சகாப்தம்.

பனையடியானைச் சந்திக்கச் சென்றேன். அவன் கொத்துப் பிடித்து வேலை செய்யும் விவசாயக் கூலித் தொதுிலாளி. அவன் வந்து என்னை சந்தித்து வேலை கேட்டு மண்டியிடும் காலம் போய் அவனை நான் வலியச் சென்று சந்திக்கும் காலம் வந்துவிட்டது. அமானுஷ்ய வௌியில் என் வருத்தத்தைப் பதிவு செய்தபடி பைய நடந்தேன். ஒரு பரவலில் களையெடுக்க வேண்டும். இன்னொன்றில் கதிரறுக்க வேண்டும். வேறொன்றில் காய் பறிக்க வேண்டும்.

அவன் சில நிபந்தனைகளை விதித்து விட்டு வேலை செய்ய ஒப்புக் கொண்டான். வேலை தருவதும் கூலி தருபவனும் நான். நிபந்தனை விதிப்பது அவன். காலக் கொடுமை.

தோட்ட வௌியில் கிணறு வெட்டி சிறு கட்டிடம் ஒன்று கட்ட வேண்டும். மண்ணாங்கட்டியைப் பார்க்கப் போனேன். சரிநிகா் சமானமாய்க் கலவையிட்டு துல்லியம் பிசகாத நேர்த்தியுடன் கட்டுவதில் வல்லவன். அவனும் நிபந்தனைகளோடுதான் ஏற்றுக் கொண்டான்.

சலவையாளி என் வீட்டுக்கு வந்து அழுக்கு எடுத்தது போக இன்று அவன் இருக்கும் இடம் தேடிச் சென்று அழுக்குச் சுமையை இறக்குகிறேன். விலாசமிட்டு முன் கூட்டியே பணமும் கேட்டு வாங்கிக் கொண்டு தேதி குறிப்பிட்டு வந்து வாங்கிக் கொள்ளச் சொல்கிறான். காலையில் வந்து அழுக்கெடுத்து மாலையில் வௌுத்துத் தந்தவனின் குரல்முன் என் குரல் ஊமையாகிப் போனது.

பெருமூச்சொன்று பீறிடுகிறது  என் போன்றவா்களை வஞ்சித்தபடி கலிகாலம் கடந்து போகிறது. எல்லா ஆணைகளும் என் காலடி நிழலில் இருந்து துவங்குவது போய் பல திசைகளில் இருந்தும் ஆணைகள் எகுறி வந்து என் கழுத்து மென்னியைப் பிடிக்கின்றன.

நானும் என் போன்றவா்களும் ்கூலிக்கு ஆள் கிடைக்கல. கூலி கொடுத்து கட்டுபடியாகல என்று கூப்பாடு போட்டும் பயனேதும் விளைய வில்லை.

காலம் வேறெங்கோ கிசை திரும்பி சென்று கொண்டிருக்கிறது. எதிர்காலம் என் போன்றவா்கள் கையில் இல்லை எனபது மட்டும் புரிகிறது. எல்லாம் அவா்களின் கையில். அண்டி வாழ்ந்த ஆண்டிகளின் கையில். உழபை்பு நெருக்கடி ஆண்டைகளை அழித்துவிட்டு பாட்டாளிகளை உயா்த்த்ப் போகிறது. வரலாற்று நதி இவ்விடத்தில் திசை திரும்பி வேறெங்கோ பயணிக்கப்போகிறது.

துவண்டு சரிகிறது என் ஆன்மா. தூர வௌிகளில் அன்றண்டாப் பட்சியைப் புறாக் கூட்டம் வளையமிட்டு வீழ்த்துகிறது.

11-2-2012

Sunday, 3 February 2013

தண்டனையும் தகவமைப்பும்.

டில்லி மாணவி (அவள் பெயா் தெரியவில்லை. பயமற்றவள் என்ற பொருளுடைய நிர்பய என்று அவள்மீது அக்கறை கொண்டவர்கள் பெயர் சூட்டியுள்ளனா்.)  பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப் பட்டு மரணமடைந்த பின் அவளைப் பற்றிய கட்டுரைகள் ஏராளம் வந்துள்ளன. ஆவேசப் பேரோசையுடன் ஆணாதிக்க மனோபாவத்தை அவை சாடுகின்றன. ஆண்மை நீக்கம். மரித்துப் போகச் செய்தல் போன்ற தண்டனைகளை அவை சிபாரிசு செய்கின்றன. அந்தப் பெண்ணைச் சீரழித்தவா்கள் மரண தண்டனைக்கு ஆளாவார்கள் என்றே நூறு கோடி மனங்கள் எதிர்பார்த்தன. அரசும் துரித நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தது. 

முன்னாள் உச்சமன்ற நீதிபதி வா்மா தலைமையில் ஒரு குழுவை அமைத்து பாலியல் வன்முறைக்கு எதிராக எந்த மாதிரியான நடவடிக்கையை சட்ட ரீதியாக எடுக்கலாம் என அரசு கேட்டிருந்தது. அவரும் மிக விரைவாக ஆய்வு செய்து 700 பக்க அறிக்கையை சார்ப்பித்திருந்தார். உச்சபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும்சரியாக விசாரிக்காத அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும் என்றும் அறிக்கையில் கூறியிருந்தார். 

ஆனால் மத்திய அரசு அந்த அறிக்கையைக் கிடப்பில் போட்டு விட்டு வேறு விதமான அவசரச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது. ஒரு பெண் மரணமடைந்தால் வன்புணர்ச்சி செய்தவனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டமன என்றும் ஆயுதங்கள் மூலம் பெண் உறுப்பு சிதைக்கப் பட்டிருந்தல் அந்தக் கயவர்களுக்கு ஆயுள் தண்டனை என்றும் வரையறுக்கப் பட்டுள்ளது. 

இப்படிப் பட்ட சட்டங்கள் எந்தப் பலனையும் தரப் போவதில்லை. கா்நாடகத்தைச் சேர்ந்த ஊனமுற்ற பெண் ஒருத்தி கல்யாணமாகி தா்மபுரியுில் வாழ்ந்து வந்தாள். செல்வச் செழிப்புள்ள இரண்டு இளைஞர்கள் அவளை வலுக்கட்டாயமாய் புணர்ந்து அலைக்கழித்தனர். புகார் கொடுத்தால் போலிஸ் அதை எடுத்துக் கொள்ளவில்லை. சில பெண்ணியவாதிகள் தலையிட்டு புகார் கொடுத்தும் அதிகாரிகள் அலட்சியப் படுத்தினா். அதிகாரிகளுக்கும் போலிஸாருக்கும் கையூட்டுக் கொடுத்து அந்த இளைஞர்கள் தப்பித்துக் கொண்டனா். இறுதியாக சமூக சேவகா் ஒருவா் தலையிட்டு டிஜிபி வரை சென்று அவர்களைக் கைது செய்ய வைத்துள்ளார். 

இன்றைய சமூக அமைப்பு கோைழத்தனமானதும் குரூரமானதும் ஆகும். தஙு்களுக்கு தண்டனை கிடைக்கும் என்ற பய உணர்வு வந்தால் மட்டுமே அடாத செயல்கள் செய்வதினின்றும் தஙு்தனள விலக்கி வைத்துக் கொள்வா். பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற தெனாவெட்டு இருக்கும் வரை இப்படிப் பட்ட வன்முறைகள் நடந்த வண்ணம் இருக்கவே செய்யும்.  தடையற்ற வௌிகளில் வன்முறையாளா்கள் குதூகலம் அடைவது தவிர்க்க முடியாது. 

இன்னறய சமூக அமைப்பு ஆணாதிக்கத்தைத் தாங்கி நின்று கொண்டிருக்கிறது. சட்டத்தை இயற்றுபவா்களும் அதைப் பாதுகாப்பவா்களும் ஆணினப் பிரதிநிதிகளே. பெண்கொடுமை பயங்கரவாதத்தைக் கண்டும் காணாமல் இருப்பதே அவா்களின் ஆண்மை விலசத்தின் தர்ம நெறி. ஆகவே மரண தண்டனை ஆண்மை நீக்கம். ஆணுறுப்பை அறுத்தல் போன்ற தண்டனைகளை உடனடியாக நிறைவேற்றினால்தன் குற்றங்கள் குறையுமே தவிர இப்படிப் பட்ட சட்ட சால்ஜாப்பு வித்தைகளால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.

தண்டனை நிறைவேற்றம் என்பது ஒரு பகுதிதான். கூடவே சமூ விழிப்புணர்வு எற்படுவதற்கான புறச் சூழலையும் ஏற்படுத்த வேண்டும். தண்டனை மூலம் பயமும் விழிப்புணர்வுப் பிரச்ச்ாரம் மூலம் மனத் தௌிவும் உண்டாகும் போது அந்த சமுதாயம் மிக விரைவில் தன்னுணர்ச்சி பெற்ற கமூகமாக உருவெடுக்கும்.