Sunday, 3 February 2013

தண்டனையும் தகவமைப்பும்.

டில்லி மாணவி (அவள் பெயா் தெரியவில்லை. பயமற்றவள் என்ற பொருளுடைய நிர்பய என்று அவள்மீது அக்கறை கொண்டவர்கள் பெயர் சூட்டியுள்ளனா்.)  பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப் பட்டு மரணமடைந்த பின் அவளைப் பற்றிய கட்டுரைகள் ஏராளம் வந்துள்ளன. ஆவேசப் பேரோசையுடன் ஆணாதிக்க மனோபாவத்தை அவை சாடுகின்றன. ஆண்மை நீக்கம். மரித்துப் போகச் செய்தல் போன்ற தண்டனைகளை அவை சிபாரிசு செய்கின்றன. அந்தப் பெண்ணைச் சீரழித்தவா்கள் மரண தண்டனைக்கு ஆளாவார்கள் என்றே நூறு கோடி மனங்கள் எதிர்பார்த்தன. அரசும் துரித நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தது. 

முன்னாள் உச்சமன்ற நீதிபதி வா்மா தலைமையில் ஒரு குழுவை அமைத்து பாலியல் வன்முறைக்கு எதிராக எந்த மாதிரியான நடவடிக்கையை சட்ட ரீதியாக எடுக்கலாம் என அரசு கேட்டிருந்தது. அவரும் மிக விரைவாக ஆய்வு செய்து 700 பக்க அறிக்கையை சார்ப்பித்திருந்தார். உச்சபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும்சரியாக விசாரிக்காத அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும் என்றும் அறிக்கையில் கூறியிருந்தார். 

ஆனால் மத்திய அரசு அந்த அறிக்கையைக் கிடப்பில் போட்டு விட்டு வேறு விதமான அவசரச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது. ஒரு பெண் மரணமடைந்தால் வன்புணர்ச்சி செய்தவனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டமன என்றும் ஆயுதங்கள் மூலம் பெண் உறுப்பு சிதைக்கப் பட்டிருந்தல் அந்தக் கயவர்களுக்கு ஆயுள் தண்டனை என்றும் வரையறுக்கப் பட்டுள்ளது. 

இப்படிப் பட்ட சட்டங்கள் எந்தப் பலனையும் தரப் போவதில்லை. கா்நாடகத்தைச் சேர்ந்த ஊனமுற்ற பெண் ஒருத்தி கல்யாணமாகி தா்மபுரியுில் வாழ்ந்து வந்தாள். செல்வச் செழிப்புள்ள இரண்டு இளைஞர்கள் அவளை வலுக்கட்டாயமாய் புணர்ந்து அலைக்கழித்தனர். புகார் கொடுத்தால் போலிஸ் அதை எடுத்துக் கொள்ளவில்லை. சில பெண்ணியவாதிகள் தலையிட்டு புகார் கொடுத்தும் அதிகாரிகள் அலட்சியப் படுத்தினா். அதிகாரிகளுக்கும் போலிஸாருக்கும் கையூட்டுக் கொடுத்து அந்த இளைஞர்கள் தப்பித்துக் கொண்டனா். இறுதியாக சமூக சேவகா் ஒருவா் தலையிட்டு டிஜிபி வரை சென்று அவர்களைக் கைது செய்ய வைத்துள்ளார். 

இன்றைய சமூக அமைப்பு கோைழத்தனமானதும் குரூரமானதும் ஆகும். தஙு்களுக்கு தண்டனை கிடைக்கும் என்ற பய உணர்வு வந்தால் மட்டுமே அடாத செயல்கள் செய்வதினின்றும் தஙு்தனள விலக்கி வைத்துக் கொள்வா். பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற தெனாவெட்டு இருக்கும் வரை இப்படிப் பட்ட வன்முறைகள் நடந்த வண்ணம் இருக்கவே செய்யும்.  தடையற்ற வௌிகளில் வன்முறையாளா்கள் குதூகலம் அடைவது தவிர்க்க முடியாது. 

இன்னறய சமூக அமைப்பு ஆணாதிக்கத்தைத் தாங்கி நின்று கொண்டிருக்கிறது. சட்டத்தை இயற்றுபவா்களும் அதைப் பாதுகாப்பவா்களும் ஆணினப் பிரதிநிதிகளே. பெண்கொடுமை பயங்கரவாதத்தைக் கண்டும் காணாமல் இருப்பதே அவா்களின் ஆண்மை விலசத்தின் தர்ம நெறி. ஆகவே மரண தண்டனை ஆண்மை நீக்கம். ஆணுறுப்பை அறுத்தல் போன்ற தண்டனைகளை உடனடியாக நிறைவேற்றினால்தன் குற்றங்கள் குறையுமே தவிர இப்படிப் பட்ட சட்ட சால்ஜாப்பு வித்தைகளால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.

தண்டனை நிறைவேற்றம் என்பது ஒரு பகுதிதான். கூடவே சமூ விழிப்புணர்வு எற்படுவதற்கான புறச் சூழலையும் ஏற்படுத்த வேண்டும். தண்டனை மூலம் பயமும் விழிப்புணர்வுப் பிரச்ச்ாரம் மூலம் மனத் தௌிவும் உண்டாகும் போது அந்த சமுதாயம் மிக விரைவில் தன்னுணர்ச்சி பெற்ற கமூகமாக உருவெடுக்கும். 

No comments:

Post a Comment