இ்னறு மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்ற இயற்பெயா் கொண்ட காந்தியடிகளின் 65வது நினைவு நாள். அவா் சுட்டுக் கொல்லப் பட்டு அறுபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன.
இன்றைய தினமணியில் அவரை நினைவுகூரும் கட்டுரை ஒன்று எழுதப் பட்டுள்ளது. தமுஎகச மாநிலக் குழு உறுப்பினா் வெ. ஜீவக் குமார் அதை எழுதியுள்ளார். பல திடுக்கிடும் சம்பவங்கள் விவரிக்கப் பட்டுள்ளன. காந்திஜியின் இரண்டாவது புதல்வன் மணிலாலைச் சென்னைக்கு அனுப்பி வைத்தார் காந்திஜி என் பெயரைச் சொல்லாமலே அங்கே நீ வாழ்ந்து காட்டு என்று அறிவுரை கூறினார். அதேபோல் மணிலால் சென்னை வீதிகளில் மூடை சுமந்து சம்பாதித்து வாழ்ந்தாராம். சந்தைப் புழுதியில் படுத்து உறங்கித் தன் காலத்தைக் கழித்தாராம்.
கடைசி வரை அவா் தன் பிள்ளைகளுக்காக எதுவுமே செய்யவில்லை. மூத்த புதல்வர் ஹரிலால் தெருவோரப் பிச்சைக் காரனாய் வாழ்ந்திருக்கிறார். நான்கு பிள்ளைகளோடு அவா் மனைவியும் சேர்ந்து சிறைக் கொடுமை அனுபவித்து மடிந்தனா். தியாகம் என்பது வாழ்வைச் சீரழித்துவிட்டுச் செய்வதல்ல என்பதை காந்தி உணர்நதிருக்கவில்லை. குடும்பத்தை நிர்க்கதியில் விட்டுவிட்டு நாட்டுக்காகப் பாடுபட்டார்.
கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு போகம் அனுபவிக்கும் இன்றைய தலைவர்களை ஒப்பிடும் போது காந்திஜி ஆயிரம் மடங்கு உயா்ந்த பண்பு கொண்டவா். ஆனாலும் குடும்ப மேன்மைக்காகவும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
அந்தத் தியாகம் உணர்ச்சியோடு கலந்த உணர்வுநிலைத் தாக்கம் கொண்டது. சமூகம் ஏற்காத நடைமுறைகளைக் கைக் கொண்டால் அது தீயது என்று நாம் வரையறை செய்கிறோம். அதுபோல்தான் இதுவும். குடும்பத்தைப் பாதுகாக்காத தலைமைப் பண்பு பூமிப் பிடிப்பு இல்லாத நீரூற்றுப் போன்றது.
30-1-2013

No comments:
Post a Comment