Tuesday, 29 January 2013

நியாயப் படுத்த வேண்டாத மதக் கோட்பாடுகள்.

எகிப்தில் இலங்யகயைச் சேர்ந்த 17 வயதுக் குமரி (ஆய்ஷா பீவி என்று நினைக்கிசறன்) மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு  செத்துப் போனாள். சாகும் வரை கல்லெறிந்து தண்டனை நிறைவேற்றப் பட்டிருரக்கிறது. நீதிபதியே முதல் கல்லை எறிந்து தண்டனை இயக்கத்தைத் தொடஙு்கி வைத்ததாகத் தெரிகிறது.

உயிர்மை ஆசிரியா் மனுஷ்யபுத்திரன் இந்தக் கொடூரத்தை எதிர்த்துக் கட்டுரை எழுதியுள்ளார். 18 வயது நிரம்பாத இளம் பெண்ணை இந்த வகையில் கொல்வது கோைழத்தனம் என்று சாடி இருக்கிறார். தௌகீத் ஜமாத் என்ற அமைப்பு அவரைக் கடுமையாக வார்சித்ததோடு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது. ஓர் இஸ்லாமியராகிய மனுஷ்யபுத்திரன் இப்படி ஷரியத் சட்டத்துக்கு எதிராக எழுதுவதை அந்த அமைப்பு விரும்பவில்லை.

விஸ்வரூபம் திரைப் படம் இஸ்லாமியர்களை இழிவு படுத்துவதாகக் கூறி அந்தத் திரைப் படத்தைத் திரையிட விட மாட்டோம் என்று போர்க் கொடி தூக்குகிறார்கள்.

ஏன் இலர்கள் கருத்துச் சுதந்திரத்தை ஏற்க மறுக்கிறார்கள் என்று கொியவில்லை. விமர்சனத்தை ஏற்காமல் எதிர் விமர்சனம் செய்யயலாம். ஷரியத் சட்டத்தை நியாயப் படுத்தும் வகைியில் சமூக நியாயத்துடன் கூடிய அதாரங்களை முன்வைக்கலாம்.

இப்படிெயல்லாம் தேவையில்லாமல்  தங்கள் மதக் கோட்பாடுகளை நியாயப் படுத்துவது வரலாற்றுச் சக்கரத்தைப் பின் நோக்கிச் சுற்றுவதோடு ஜனநாயகச் சிந்தனைகளைக் குழிதோண்டிப் புதைப்பதும் ஆகும். இப்போது அவரகளுக்கு ஆதரவாக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இடது சிந்தனையாளர்களின் குரலும் எதிர்காலத்தில் வலுவுிழக்கக் கூடும். தங்கனளத் தாங்களே பலவீனப் படுத்த மட்டுமே பயன்படும் இத்தகைய ஜனநாயக விரோதக் கோட்பாடுகளைக் கைவிடுவது இந்திய ஒற்றுமைக்கும் இவர்களின் பரந்துபட்ட வாழ்வியல் விரிவாக்கத்துக்கும் நல்லது.

29-1-2013

No comments:

Post a Comment