Monday, 31 December 2012

புத்தாண்டு வரவு!

இளவேனிற் பருவத்தில் ..................................................................................
புலர்கிறது தமிழ்ப் புத்தாண்டு.............................................................................
ஆங்கிலப் புத்தாண்டோ .........................................................................................
கடும்பனிக் காலத்தில்.-----------------------------------------------------------------------

ஆக்கிரமித்தான் ஆங்கிலேயன் ------------------------------------------------------------------
எமது மண்ணை --------------------------------------------------------------------------------------
ஒரு காலத்தில்.----------------------------------------------------------------------------------------

இன்றும் எம்மை ஆள்கின்றன -------------------------------------------------------------------
ஆங்கிலச் சிந்தனை------------------------------------------------------------------------------------
ஆங்கில மருத்துவம்------------------------------------------------------------------------------
ஆங்கிலக் கல்வி----------------------------------------------------------------------------------------
ஆங்கில ஆண்டு.------------------------------------------------------------------------------------

அடடா ஓ அடடா!-----------------------------------------------------------------------------------
விலக முடியாமல் தவிக்கிறேன் -----------------------------------------------------------
ஆங்கில ஆண்டின் ---------------------------------------------------------------------------------------
பயன்பாட்டுப் பாதையில் இருந்து.--------------------------------------------------------------

இளவேனில சுகத்தை-------------------------------------------------------------------------------
இகழ்ந்து ஒதுக்கி விட்டு----------------------------------------------------------------------------
கடும் பனி வரட்சியைக் ---------------------------------------------------------------------------
கரகோஷித்து வரவேற்கிறது -------------------------------------------------------------------
நாடு!------------------------------------------------------------------------------------------------------

புதிய ஆண்டு.

31-12-2012 முன்னிரவு 8 மணி.

2012 தன் கடைசி ஜீவனை சுவாசித்துக் கொண்டிருக்கிறது. சோகங்களும் துயரங்களும் நிறைந்த ஆண்டு இது. அவை இந்த வருடத்தின் இணையாய் நின்று அல்லது அதன் மீது சவாரி செய்து விலகிப்  போய்விடுமா என்று தெரியவில்லை. இந்த ஆண்டின் ஏராளமான மரணங்கள் மெளனமாய் நிகழ்த்தப் படவில்லை. ரணங்களும் வலிகளும் ரத்தப் பிசுபிசுப்பும் தோய்ந்த ஜீவ வதையாய் நடந்தேறின. தாழ்த்தப் பட்ட மக்களும் பெண்களும் மிகப் பெரிய இழப்புக்களைச் சந்தித்த்னர்.

வன்னிய வெறியர்களால் தர்மபுரி மாவட்டத்தின் மூன்று கிராமங்கள் கொளுத்தப் பட்டன. தாழ்த்தப் பட்ட  இளைஞனும் வன்னியகுலப் பெண்ணும் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்ற மொன்னையான காரணத்தைச் சொல்லி இந்தக் கொடூரத்தை நிகழ்த்தி இருக்கிறார்கள். வாழ்வதற்கு எந்தப் பொருளும் இல்லாமல் அவர்கள் நிர்க்கதியாக்கப் பட்டார்கள். மரணித்தவா்கள் சுகவாசிகள் என்கிற அளவுக்கு அந்த மக்கள் வாழும் பிணங்களாய் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். புத்தாண்டு முழக்கங்கள் வியாபகமாகிக் கொண்டிருக்கும் இந்த இருள் வௌிக் காலத்தில் அந்த ஆத்ம ஜீவிகளுக்கு எந்த விதமாய் வாழ்த்துரைக்கப் போகிறோம்?

முன் எப்போதையும்விட பாலியல் மரணங்கள் அதிக அளவில் நடந்தறி இருக்கின்றன. குழந்தைப் பருவத்துக்கும் குமரிப் பருவத்துக்கும் இடைளில் நின்றுகொண்டிருக்கும் இளம் பெண்கள் பாலியல் புணர்ச்சிக்கும் படுகொலைக்கும் உட்படுத்தப் பட்டிருக்கின்றனர். கோவையைச் சேர்ந்த 11 வயது மாணவியும் தூத்துக் குடியைச் சேர்ந்த 13 வயது மாணவியும் ஆண்களின் கேவலமான இச்சை உணர்ச்சிக்குள் மூழ்கடிக்கப் பட்டுள்ளனர்.

கொடூரத்தின் உச்சமாக டில்லியைச் சேர்நத 23 வயது மாணவி ஓடும் பேருந்திலேயே ஒட்டுநா் மற்றும் நடத்துனா் உட்பட ஆறு கயயவா்களால் சிதைக்கப்  பட்டு கொலை செய்யப் பட்டிருக்குிறாள். அவளும் அவள் நண்பனும் கடைசிவரை போராடியும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. பேருந்துப் பயணமும் பாதுகாப்பற்றதாய் மாறி இருக்கிறது.

நாம் போற்றிப் பாதுகாத்த உன்னதமான பண்பாட்டுக் கோட்பாடுகள் அன்னியப் பண்பாட்டு நுைழவாலும மதுவுக்கு அடிமையாகிப் போன இளைஞர்களின் அராஜகத்தாலும் அழிந்து மடிந்து கொண்டிரு்ககின்றன. எப்படிக் காப்பாற்றப் போகிநறாம்? எதிர்காலச் சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லப் போவது இந்த மது போதையையும் பண்பாட்டுச் சீரழிவையும்தானா? பெருமூச்சு பீறிடுகிறது.

சில்லரை வா்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு இன்னொரு பெரும் தாக்குதல். பெண்கள் தங்கள் உடலை விற்றும் ஆண்கள் தங்கள் ஆன்மாவை சிற்றும்தான் வாழப் போகிறார்கள். அவற்றை வாங்குவதற்கு அன்னிய முதலாளிக்ள் போட்டி போட்டுக் கொண்டு பெரும் பெரும் சந்தைகளை இந்தியாவுக்குள் உருவாக்கப் போகிறார்கள்.

2013 என்ற புத்தாண்டு இன்னும் சில மணி நேரங்களில் பிறப்பெடுக்கப் ோகிறது. ஆனால் இந்திய மேன்மைகளும் மாண்புகளும் கண்ணுக்குத் தெரியாத அதல பாதாள ௌிகளில் வீழ்ந்து ொண்டிருக்கின்றன

புரட்சிப் பதை நம் கண்களுக்குத் தென்படும் ோது இந்த அவலங்களின் அழிவு காலம் துவங்கக் கூடும்.

Saturday, 29 December 2012

நீதி

     கம்பீரமும் கவுரவப் பராக்கிரமும் எல்லையற்ற அதிகாரமும் கொண்ட மேல் நீதிமன்றத்தில் வித்தியாசமான முறையில் வழக்குத் தொடுத்தான் சந்தான கோபாலன். வழக்கு வித்தியசமாய் இருப்பதாகவும் மாண்புமிகு நீதிபதிகள் பலபோ்  அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பலகட்ட விவாதங்கள் நடத்தி அதன் பிறகுதான் தீர்ப்பு வழங்க முடியும் என்றும் பிரகடனப் படுத்தியது நீதிமன்றம்.

     சந்தான கோபாலன் தொடுத்த வழக்கு விண்ணப்பத்தின் சாராம்சம் இதுதான்.

     கோபால சந்தானம் என்ற சமூக விரோதி என் அன்னையைப் பற்றி அவதூறாகப் பேசியிருக்கிறான். அவன் உதிர்த்த வசை மொழி ஆழமும் அடுக்கடுக்கான கன பரிமாணமும் கொண்டதாகும். வேசைத் தனம் கொப்பளிக்கும் அசாதாரண பாஷை அது. அம்மொழி கேட்டு நாகரீக உலகம் கிஞ்சிற்றும் சகித்துக் கொள்ளாது என்பது நிச்சயம். அடக்க ஒடுக்கப் பண்பும் அடுத்த வீடு தெரியாத பவ்வியமும் யாரையும் எறெடுத்துப் பாராத விழி நோக்கும் கொண்ட ஓர் அடுப்பங்கரைப் பெண்மணியை தேவையற்ற வார்த்தையால் விசாரித்து அவரின் ஒழுக்க சீலத்தை ஓடு பெயர்ந்த கூரை வீடாக்கி விட்டான்.

     ஆம்! அன்று  சந்தான கோபாலா என்று என்னை  அழைத்தான் கோபால சந்தானம். சாலையில் நடந்துகொண்டிருந்த நான் நின்று ூஎன்ன என்றேன்.

     அம்மா நல்லாருக்காளா என்று விசாரித்தான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. என்ன உளறுகிறான் இவன் என்று கோபம் உண்டானது. இந்தியப் பண்பாட்டின் ஆத்மாவைச் சிதைக்கும வகையில் இருந்தது அவன் கேள்வி. இருக்காளா என்கிறானே. அவள் இவள் என்று பேசுவதற்கு இவன் யார்? அந்த விசாரிப்பின் மூலம் இந்தியப் பண்பாட்டை அவமதித்து விட்டான். நிபுணத்துவம் வாய்ந்த நமது சட்ட அளவுகோலின்படி கோபால சந்தானத்துக்கு மரண தண்டனை வழஙு்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

     முதலில் ஒரு நபர் அமா்வு இந்த வழக்கை விசாரித்தது. வாதியின் வாத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. பண்பாடு என்றால் என்ன? அது எப்படி சிதைக்கப் பட்டது என்பதை சட்ட சரத்துக்களின் வழியே பயணித்த போது அவரால் அனுமானிக்க முடியவில்லை. அதனால் மூவா் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாகத் தீர்ப்புக் கூறினார்.

     மூவர் அமா்வு கோபால சந்தானத்தைக் கூப்பிட்டு விசாரித்தது.

     நீ அப்படிக் கூறினாயா?

     இல்லை. நான் அப்படிக் கூறவில்லை.

     பிறகு எப்படிக் கூறினாய்?

     அம்மா நல்லாருக்காகளா என்றுதான் சொன்னேன்.

     அதாவது?

     இருக்காளா என்பதற்கும் இருக்காகளா என்பதற்கும் இடையில் ஒரு ்க ் இருப்பதை மேன்மை மிகு நீதிமன்றம் உன்னிப்பாகக் கவனி்க்க வேண்டும். ஆகவே என் விசாரிப்பில் பண்பாட்டுச் சீரடழிவு என்ற பேச்சுக்க இடமில்லை.

     நீதிமன்றம் மிகவும் குழம்பிப் போனது. க இல்லாத ளா வும் க போட்ட ளா வும் இந்தியப் பண்பாட்டை எந்த விதத்தில் பாதிக்கின்றன என ஊகிக்க முடியவில்லை. எனினும் எல்லையற்ற கல்விச் சிறப்பும் எல்லையற்ற சட்ட ஞானமும் எல்லையற்ற அதிகாரமும் கொண்ட நீதிபதிகள் எந்தத் தீர்ப்பையும் வடழங்காமல் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தது நீதிமன்றம். தீர்ப்பை இன்கனாரு நாள் வழங்குவதாகக் கூறி ஒத்தி வைத்தனர். நீதிபதிகள் கூடி பலகட்ட விவாதம் நடத்தினர். நிறைவாக சட்ட வல்லுநா்கள் அரசியல் தலைவர்கள் பொது மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய சபையில் தங்கள் தீர்ப்பை முன் வைத்தனர். தீர்பபு விபரம் பின் வருமாறு.

     க போட்ட ளா வும் க ேபாடாத ளா வும் வெவ்கவறான அர்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன. இது மக்கள் பேசும் சாதாரண மொழிதான் என்றாலும் மிகப் பெரிய விபரீதத்தை ஏற்படுத்த இருந்தது. அதைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் இந்த நீதிமன்றம் நீதி வழங்க முடியும். ஆகவே மக்கள் தாங்கள் பேசும் மொழியைத் திருத்தமாகவும் சுத்தமாகவும் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். நூறுபேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அரசாங்கம் அமைக்க வேண்டும். அவர்கள் கூடி விவாதித்து புதிய மக்கள் மொழி ஒன்றை உருவாக்க வேண்டும். புதிய சொற்கள் புதிய சொற்றொடர்கள் புதிய பழமொழிகள் அவற்றுக்கான புதிய அர்த்தங்கள் என்று அந்த மொழி அமைப்பு இருக்கலாம். அதற்கான அகராதியை உருவக்கி புழக்கத்தில் விடவேண்டும். அலாவுதின் கில்ஜி தலைநகரத்தை மாற்றியது போல அரசாங்கம் மக்களின் பேச்சு மொழியைத் தன் அதிகாரக் கரம் கொண்டு மாற்றி அமைக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் உத்திரவிடுகிறது.

Friday, 28 December 2012

     னித இனம் வெட்கித் தலை குனியக் கூடிய  அந்த நிகழ்வு நடந்தே விட்டது. ஆம். கடந்த 16-12-12 அன்று டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட மருத்துவ மாணவி இன்றுஅதிகாலை 2-15 மணிக்கு சிங்கப்பூா் எலிசபெத் மருத்துவ மனையில் இறந்து போனார். இன்று மாலை அவள் உடல் இ்நதியாவுக்குக் ொண்டு வரப் படுகிறது. 
     அன்று  இரவு 9-30 மணிக்கு ஒடும் பஸ்ஸில் இந்த கோரம் நடந்திருப்பது கற்பனைக்கு எட்டாத வன்முறை. மனித குல வரலாற்றின் கருப்பு அத்தியாயங்கள் குவிந்து கிடக்கும் குப்பை வௌியில் அன்றைய தினம்  தனது தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறது.வாழ்வின் சகல சௌபாக்கியத்தோடும் வாழத் துடித்த ஒரு மனித ஜீவி ஆணாதிக்க வன்முறைக்கு இலக்காகி ஏதுமற்ற ஜடமாகிப் போனது.

     ஆறு போ் கொண்ட மனிதக் கசடுகளால் அந்தப் பெண் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப் பட்டாள். அவளின் பாலியல் உறுப்பு கிழிந்து தொங்கிவிட்டது.மார்பகங்கள் நைந்து புண்ணாகிவிட்டன. கர்ப்பப் பை ஊதிப் பெருதி வலுவிழந்து விட்டது. ஒரு மனிதப் பெண் உடம்பு சுயமிழந்து சின்னாபின்னமாகிச் சிதைந்தது.

     அந்த மனிதக் கொடுசூரிகளுக்கு என்ன தண்டனை தருவது என நாடு பூராவும் விவாதம் நடந்து ொண்டிருக்கிறது. (மனித மிருகங்கள் என்று சொல்வது பொருத்தம் இல்லை. மிருகங்கள் எதிர் பாலினத்தை சிதைத்து சின்னாபின்னமாக்குவதில்லை.) கோடான கோடிப் போ் மரண தண்டனைளயத் தேர்வு செய்கின்றனா். 

     அது பொருத்தமற்றது என்பது என் மனைவியின் வாதம். அவா்களின் பாலியல் உறுப்பை அறுத்து அவா்கள் கண்ணுக்கு முன்னாலேயே காகத்துக்கு இரையாக்கிவிட வேண்டும் என்றிறார். எனக்கும் கூட இது சரியெனவே பட்டது. 

     அந்தப் பெண்ணின் பெயரை எந்த ஊடகமும் இதுவரை வௌியிடவில்லை. இதற்குப் பின்னால் ஏதும் மர்மம் இருக்கிறதா என்று தொியவில்லை. அவளுடன் பயணம் செய்த அவள் காதலன் என்ன ஆனான் என்றும் கொியவில்லை. இந்த வன்முறையில் பெரிய அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ ஈடுப்பட்டிருப்பார்கயளா என்று தோன்றுகிறது. 

     2012அம் ஆண்டின் மிகப் பெரிய சோக நிகடழ்வு இந்தச் சம்பவம்தான்.

     ஆண்களை அகற்றுங்கள்........................................................
    அ்ணடியெங்கும்...................................................
    ஆதிக்கப் புன்னகைோடு -------------------------------------
    அராஜகப் பயணம் செய்யும் ------------------------------------
    ஆண்களை அகற்றுங்கள்.

    வேதனை வழுதுகளை
    உள்வாங்கி உள்வாங்கி -------------------------------------------
    உதிரம் உறைந்து கிடக்கும் -----------------------------------
    பெண்களைக் காப்பாற்ற ---------------------------------------
     ஆண்களை அகற்றுங்கள்.        

Sunday, 23 December 2012

விவேகானந்தர்

     1892ஆம் ஆண்டு புரட்சித் துறவி விவேகானந்தா் கன்யாக் குமரிக்கு வந்தார். நாடு முழுவதும் சுற்றித் திரிந்துவிட்டு நிறைவாக அந்த இடத்தை அடைந்தார். அந்தக் காலத்தில் இமயம் முதல் குமரி வரை சுற்றித் திரிந்த இளம் வாலிபராய் இருந்தார் அவா். சேரளத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு ்இது பைத்தியக் காரா்களின் நாடு்் என்றார். ஜாதி வெறியா்கள் அதிகம் உள்ள மாநிலம் என்பது அவர் கணிப்பு.

     தான் சுற்றிப் பார்த்தவற்றை ஆய்வு செய்ய ஓா் அமைதியான இடம் தேவைப் பட்டது. குமரிக் கடற்கரை அதற்குத் தோதுவானதாய் இருந்தது. கடல் மையத்தில் இருந்த பாறைக் கூட்டம்  அவரை வசீகரித்தது. மீனவா்களிடம் அந்தப் பாறைத் தீவில் தன்னை இறக்கி விடும்படி கேட்டார். ்காவி உடை தரித்த சிறுவன்் என்று .இளக்காரமாய் நினைத்த அவர்கள் மறுத்து விட்டனர். துணிச்சலும் தைரியமும் இயல்பாய்க் கொண்டிருந்த விவேகானந்தா் கடலில் குதித்து நீந்திச் சென்றார். கொந்தளிக்கும் கடல் நடுவே மூன்று மைல் தூரம் நீச்சல் அடித்து பாறைக் கூட்டத்தை அடைந்தார். அன்னந்தண்ணி ஏதும் இன்றி மூன்று நாட்கள் தவம்  செய்தார். அப்போது அவருக்குத் தோன்றிய ஞானோதயம் மனிதனின் பசி பற்றியது. ்பசித்திருக்கும் மனிதனிடம் மத போதனையோ அரசியல் போதனையோ எடுபடாது்் என்றார்.

     விவேகானந்தா் அந்தப் பாறைத் தீவில் கழித்த அந்த மூன்று நாட்கள் (டிசம்பா் 24. 25. 26) மகத்தானவை. அதன் பிறகுதான் உலகம் முழுவதும் சுற்றி மனிதனின் பண்பாட்டுத் தளத்தை மேம்படுத்தவும் இளைஞா்களின் ஆற்றலை சமூக மேன்மைக்குப் பயன் படுத்தவும் சபதம் பூண்டார்.

     சிக்காகோவில் அவா் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது நடந்த ஒரு சம்பவம் அவா் துணிச்சலைப் பறை சாற்றுவதாய் இருக்கிறது.

     புகைவண்டியில் ஏறி இரண்டு ஆங்கிலேய கனவான்களுக்கு இடையில் அமர்ந்து பயணம் செய்தார். இவருக்கு ஆங்கிலம் தெரியாது என நினைத்துக் கொண்டு அந்தக் கனவான்கள் இவரைப் பரிகாசம் செய்தனர். ஒருவா் இவரைப் பார்த்து He looks like a donkey (இவா் ஒரு கழுதையைப் போல் இருக்கிறார்). என்றார். இன்னொருவா் சொன்னார் No no. he looks like a monkey (இல்லை, இல்லை, அவா் ஒரு குரங்கைப் போல் இருக்கிறார்) என்றார். அவா்களை முறைத்துப் பார்த்த இளம் துறவி I am sitting between the two (நான் அந்த இரண்டுக்கும் நடுவில்தான் உட்கார்ந்திருக்கிறேன்) என்று பதிலடி கொடுத்தார். அரண்டு போன அந்த ஆங்கிலேயா்கள் வேறு இடத்தில் போய் அமர்ந்து கொண்டனர்.

     விவேகானந்தா் மனித நேயத்தின் இருப்பிடம். சிறுமை கண்டு பொங்கும் துணிச்சலின் மறு உருவம். மனித மாண்புபளைத் தூக்கிப் பிடிக்காத மத போதனையை நிராகரித்தார். மதமும் அரசியலும் மனித மேன்மையைத் தூக்கிப் பிடிக்க வேண்டுமே தவிர சீரழிக்கக் கூடாது என்றார்.

     அவரைப் போற்றுவோம்! அவா் வழி நடப்போம்!


Saturday, 22 December 2012

     குதியாளம் போட்டுக் கொண்டு ஓடி வந்தான் பேரன். ஒரு பறவை சிறகை விரித்துக் கொண்டு மேலும் கீழும் டைவ் அடிப்பது போலவும்  இலை உதிர் காலம் முடிந்தபின் தளிர்க்கும் வசந்தகால விருட்சம் போலவு அவன் எகுறிக் குதித்து சந்தோஷக் குழல் ஊதினான். என்றும் இல்லாத அளவுக்கு அவன் முகம் நீா் நிறைந்தோடும் ஓடை போல ததும்பிச் செழித்திருந்தது. இரண்டு கைகளின் விரல்களையும் மடக்கிப் பெருவிரல்களை மட்டும் நீட்டிபுல்லாங்குழல் போல வைத்துக் கொண்டு வாயில் வைத்துப் பீப்பீ என ஊதினான்.

     ஏதோ காசுக்குத்தான் அடிப் போடுகிறான் என்று நினைத்த நான் என்ன வேணும் என்றேன்.

     என் பேச்சை செவி மடுக்காதவனாய் மேலும் மேலும் தவ்விக் கொண்டிருந்தான். ஏதோ ஒன்றால் ஈர்க்கப் பட்டிருக்கிறான் என்பதை மட்டுந்தான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

அவன் ஆட்டபாட்டம் எல்லாம் முடிந்து அமைதி அடைந்த  பிறகு மெதுவாய்க் கேட்டேன். என்னடா இன்னக்கி இம்புட்டுத் தவ்வாளம் போடுற?

     உடனடியாக அவன் சொன்னான் இன்னக்கி கரண்டு போகல தாத்தா.

Friday, 21 December 2012

டி எஸ் அவா்களுக்கு வாழ்த்து

     ோழர் டி செல்வராஜ் அவா்கள் எழுதிய ோல் நாவலுக்கு 2012 ஆம் அண்டின் சாகித்திய அகாடமி பாிசு அறிவிக்கப் பட்டுள்ளது. வரவேற்கத்தக்க நல்ல செய்தி. அவா் ஒரு தலித் எழுத்தாளா். தலித் எழுத்து என்ற வகைமை உருவாவதற்கு முன்பே அவரின்  எழுத்துக்கள் தலித் எழுத்துக்களாக அறியப் பட்டன. தேநீா். மலரும் சருகும் மூலதனம் போன்றவை தலித்துகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டவை. தோல் இன்னொரு தலித் எழுத்து என்றே சொல்லவேண்டும். தோல் பதனிடும் தொழிலாளிகளைப் பந்றிய நாவல். 1930 முதல் 1958 வரை திண்டுக்கல் தோல் தொழிற்சாலையில் தொழிலாளிகள் முதலாளிகளால் வஞ்சிக்கப் பட்டதையும் செங்கொடி இயக்கத்தின் கீழ் அவா்கள் அணி திரள்வதையும் இறுதியில் வெற்றி அடைவதையும் விவரிக்கிறது நாவல்.

    டி எஸ் என்று எல்லாராலும் அன்போடு அழகை்கப் பட்ட தோழர் வெல்வராஜ் ஆற்றல் மிக்க நல்ல எழுத்தாளர். அங்கதச் சுவை நனி சொட்டச் சொட்ட எழுதக் கூடியவா். முதாளித்துவத்தை நையாண்டி செய்து இவா் எழுதிய சிறுகதைகள் ஏராளம்.தமுஎசவிற்குள் லாப நோக்கு இல்லாமல் செயல்பட்டவா்களில் இவரும் ஒருவா். அமைப்புக்குள் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று இவா் அவ்வப்போது வருத்தப் பட்டதுண்டு. சமீப சில ஆண்டுகளாக தமுஎசவில் இருந்து அவா் பிலகியே நிள்றிருந்தார்.

    ஏற்கனவே பெரிய விருதுகள் தந்து சிறப்பிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் கால தாமதமாகக் கிடைத்திருக்கிறது. இருந்தாலும் நல்ல படைப்புக்கு நல்ல நேரத்தில் வழங்கப் பட்டிருக்கிறது.

     நேற்று அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். அவா் பூரிப்போடு காணப்பட்டார்.

     மனிதநேயம். அல்லவை கண்டு ரொத்திரம் கொள்ளும் பாங்கு ஆகியவை அவா் படைப்புப்பளின் சிறப்பம்சங்கள்.

    அவா் சிறந்த மார்க்ஸியவாதி என்றாலும் தமிழ்ப் பண்பாட்டின் மல் ஆழ்ந்த பற்றுக் கொண்டவா். அவா் மகள் கல்யாணத்தை திருக்குறள் மற்றும் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்தினார். நானும் இதயகீதனும் கல்ந்து கொண்டோம்.

     இனிமேல்தான் தோல் வாசிக்க வேண்டுிம்

Thursday, 20 December 2012

சமநோக்கு!

இரண்டு பேத்திகளும்
ஓடி வந்ததுகள்.

ஓா் அகவை கூடிய மூத்தவள்
வேகமாய் வந்து
கால்களைப் பிடித்துத்
தூக்கச் சொன்னாள்.

பின்னே வந்த இளையவள்
கீேழத்து உருண்டாள்
தன்னைத் தூக்கச் சொல்லி.

போ! எங்க தாத்தா
என்று மூத்தவளும்
நானு தாத்தா
என்று இளையவளும்
உரிமை கொண்டாடி
என்னை நத்தினா்.

இருவரையும்
இருபுறமும் தூக்கி
முத்தமிட்டேன் நான்.

தாத்தாவின் தோள்களில்
சமதையாய் சவாரி செய்த போது
சந்தோஷம் பீறிட
ஒருவரை ஒருவா்
கிச்சுக் கிச்சு மூட்டினா்
புளகாங்கிதமாய்!
குரங்குகள் மகிழ்ச்சியாய் விளையாடத் ொடங்கின. ஏ்றகனவே அவற்றுக்கு இருந்த பயம் விலகி தெம்பு உண்டாகி இருந்தது. கிட்டத்தில் வந்தால அதிர்வலைகளை உண்டாக்கி விரட்டுமே அந்த ோரம் இப்ோது இல்லை. அந்த மின் வயா்கள் இப்ோது எதுவரியாத அப்பாவிகளைப் ோல நீண்டு கிடந்தன. ஆற்றங்கரைக் ொக்கு ோல திடுமெனத் தாக்குமா எனத் தெரியவில்லை. ஆண்டுகள் பலவாய் அதிர்வலைகளை ஏற்படுத்திக் ொண்டிருந்த மின்சாரம் என்ற ராட்சசக் ொடுங்ோலன் இந்தச் கில வருடங்களாய்த் தனது பயமுறுத்தலை நிறுத்திக் ொண்டான். 

எனக்கு ஒரு மனைவி இுந்தாள். என்னைத்தவிர வேறு எவனையும் காதலிக்காதவள். எந்தக் குங்காவது கிட்டத்தில் அண்டினால் தனது ரைப் கற்களால் கடித்துக் குதறி விடுவாள். அப்ோர்ப்பட்ட என் நாயகி ஒரு முறை படிக் கடையில் ோய் வைழப் படழ சீப்பைத் தூக்கியேபாது கடைக்காரன் கூரான கத்தியால் ஒங்கிக் குத்திவிட்டான். பாவம் அவள். பாயம் பட்ட ோதும் படிச் சீப்பைத் தவர விடாமல் ொண்டு வந்துவிட்டாள். 

அவள் காலில் இருந்து ரத்தம் ொட்டிக் ொண்டே இருந்தது. வலி தாங்காமல் அங்கும் இங்கும் ஓடினாள். மரக் ொப்பில் இருந்து வயா் மேல் குதித்தாள். காயத்தின் வழியே மின்சாரம் பாய்ந்து செத்துப் ோனாள். 24 மணி நேரமும் மின்சாரம் பாய்ந்து ொண்டிருந்த காலம் அது. காயம் இல்லாமல் இருந்தால் வேறும் அதிர்வலைகளை மட்டுமே சந்து விரட்டி இருக்கும். 

நிறையப் ோ் அதை வேடிக்கை பார்த்தார்கள். அவா்கள் ொழிற்சாலைகள் எல்லாம் மூடிக் கிடந்கன.     மின்சாரம் வரவில்லையாம். எங்களுக்குக் கொண்டாட்டம். அவர்களுக்குத் திண்டாட்டம்.

முதலில் ஆரவாரமாய்ப் பார்த்து ரசித்தவா்கள் நேரம் ஆக ஆக சோர்ந்து துவண்டு சரிந்தார்கள். உண்ண ஏதும் கிடைக்கவில்லையாம்.

செங்கோல் ஏந்திய ஒருவன் வான உச்சியில் நின்று கொண்ட பயப்படாதீர்கள் என்றான். மின்மிகு காலம் விரைவில் வரும் என்றும் அதுவரை பொறுத்துக் கொள்ளுமாறும் வேண்டினான்.

அய்யோ பசிக்கிறதே என்று அவா்கள் அலறினார்கள். செஙகோலை பூமிவரை நீட்டி வித்தை காட்டினான். அதைப் பார்த்தபடி பசியை மறந்தவா்கள் சிறிது நேரத்தில் மீண்டும் அலறினார்கள்.

இன்கனாருவன் வந்தான். சிவந்த பழங்களைக் கொடுத்துப் பசியமத்தப் பார்த்தான். பத்தவில்லை என்று மீண்டும் அலறினார்கள்.

மின்சாரம் உங்கள் உரிமை போராடுங்கள் என்றான். சிவந்த பழம் சாப்பிட்டவா்கள் கண்கள் சிவந்து கைளை உயா்த்தினார்கள். நான் பயந்து போய் விலகி விலகி ஓடினேன். அவா்கள் கைகள் வானம் வரை உயா்ந்து செங்கோலைத் தொட யத்தனித்த போது வெகுதூரம் ஓடி ஒளிந்து கொண்டேன் எம்தமயும் தாக்குவார்களோ என்று பயந்து.

Wednesday, 19 December 2012

வாழ்த்துக்கள்.

paarvai:
தினேஷ்குமார் தனது பிளாகில் பணமைழ என்றொரு
கட்டுரை எழுதியுள்ளான். ஆச்சா்யமாய் இருந்தது. இவ்வளவு
நுட்பமான வார்த்தைப் பிரயோகத்தேதாடு எழுதுகிறானே எனறு.
அவனுக்கு நல்ந எதிர்காலம் இருக்கிறது.