31-12-2012 முன்னிரவு 8 மணி.
2012 தன் கடைசி ஜீவனை சுவாசித்துக் கொண்டிருக்கிறது. சோகங்களும் துயரங்களும் நிறைந்த ஆண்டு இது. அவை இந்த வருடத்தின் இணையாய் நின்று அல்லது அதன் மீது சவாரி செய்து விலகிப் போய்விடுமா என்று தெரியவில்லை. இந்த ஆண்டின் ஏராளமான மரணங்கள் மெளனமாய் நிகழ்த்தப் படவில்லை. ரணங்களும் வலிகளும் ரத்தப் பிசுபிசுப்பும் தோய்ந்த ஜீவ வதையாய் நடந்தேறின. தாழ்த்தப் பட்ட மக்களும் பெண்களும் மிகப் பெரிய இழப்புக்களைச் சந்தித்த்னர்.
வன்னிய வெறியர்களால் தர்மபுரி மாவட்டத்தின் மூன்று கிராமங்கள் கொளுத்தப் பட்டன. தாழ்த்தப் பட்ட இளைஞனும் வன்னியகுலப் பெண்ணும் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்ற மொன்னையான காரணத்தைச் சொல்லி இந்தக் கொடூரத்தை நிகழ்த்தி இருக்கிறார்கள். வாழ்வதற்கு எந்தப் பொருளும் இல்லாமல் அவர்கள் நிர்க்கதியாக்கப் பட்டார்கள். மரணித்தவா்கள் சுகவாசிகள் என்கிற அளவுக்கு அந்த மக்கள் வாழும் பிணங்களாய் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். புத்தாண்டு முழக்கங்கள் வியாபகமாகிக் கொண்டிருக்கும் இந்த இருள் வௌிக் காலத்தில் அந்த ஆத்ம ஜீவிகளுக்கு எந்த விதமாய் வாழ்த்துரைக்கப் போகிறோம்?
முன் எப்போதையும்விட பாலியல் மரணங்கள் அதிக அளவில் நடந்தறி இருக்கின்றன. குழந்தைப் பருவத்துக்கும் குமரிப் பருவத்துக்கும் இடைளில் நின்றுகொண்டிருக்கும் இளம் பெண்கள் பாலியல் புணர்ச்சிக்கும் படுகொலைக்கும் உட்படுத்தப் பட்டிருக்கின்றனர். கோவையைச் சேர்ந்த 11 வயது மாணவியும் தூத்துக் குடியைச் சேர்ந்த 13 வயது மாணவியும் ஆண்களின் கேவலமான இச்சை உணர்ச்சிக்குள் மூழ்கடிக்கப் பட்டுள்ளனர்.
கொடூரத்தின் உச்சமாக டில்லியைச் சேர்நத 23 வயது மாணவி ஓடும் பேருந்திலேயே ஒட்டுநா் மற்றும் நடத்துனா் உட்பட ஆறு கயயவா்களால் சிதைக்கப் பட்டு கொலை செய்யப் பட்டிருக்குிறாள். அவளும் அவள் நண்பனும் கடைசிவரை போராடியும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. பேருந்துப் பயணமும் பாதுகாப்பற்றதாய் மாறி இருக்கிறது.
நாம் போற்றிப் பாதுகாத்த உன்னதமான பண்பாட்டுக் கோட்பாடுகள் அன்னியப் பண்பாட்டு நுைழவாலும மதுவுக்கு அடிமையாகிப் போன இளைஞர்களின் அராஜகத்தாலும் அழிந்து மடிந்து கொண்டிரு்ககின்றன. எப்படிக் காப்பாற்றப் போகிநறாம்? எதிர்காலச் சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லப் போவது இந்த மது போதையையும் பண்பாட்டுச் சீரழிவையும்தானா? பெருமூச்சு பீறிடுகிறது.
சில்லரை வா்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு இன்னொரு பெரும் தாக்குதல். பெண்கள் தங்கள் உடலை விற்றும் ஆண்கள் தங்கள் ஆன்மாவை சிற்றும்தான் வாழப் போகிறார்கள். அவற்றை வாங்குவதற்கு அன்னிய முதலாளிக்ள் போட்டி போட்டுக் கொண்டு பெரும் பெரும் சந்தைகளை இந்தியாவுக்குள் உருவாக்கப் போகிறார்கள்.
2013 என்ற புத்தாண்டு இன்னும் சில மணி நேரங்களில் பிறப்பெடுக்கப் போகிறது. ஆனால் இந்திய மேன்மைகளும் மாண்புகளும் கண்ணுக்குத் தெரியாத அதல பாதாள வௌிகளில் வீழ்ந்து கொண்டிருக்கின்றன.
புரட்சிப் பதை நம் கண்களுக்குத் தென்படும் போது இந்த அவலங்களின் அழிவு காலம் துவங்கக் கூடும்.

No comments:
Post a Comment