Wednesday, 16 January 2013

சிந்தனாஞானத்தின் ஆளுகை!

கடந்த 8-1-13ல் இந்தியப் படை வீரர் ஹேமந்த் ராஜ் பாகிஸ்தான் படையினரால் கொடூரமான முறையுில் சிரச் சேதம் செய்யப் பட்டார். தலையைத் துண்டித்து எடுத்துக் கொண்டு போய்விட்டனர். இது சர்வதேச விதிமுறைகளை மீறிய போர்க் குற்றம் ஆகும்.

மோதலின் போது படை வீரர்கள் சாவது யுத்த எல்லை வரையறைக்குள் வந்து விடும். குண்டடிபட்டு சாகலாம். ஆயுதங்களால் தாக்கப்பட்டு மரிக்கலாம். கொல்லப் பட்டவரின் தேசம் கண்டனம் தெரிவிக்கும். உலக நீதிமன்றம் இதை ஒரு வழக்காகவே எடுத்துக் கொள்ளாது. சித்திரைவதை செய்து கொல்வது கூட விசாரணை என்ற நியாய எல்லைக்குள் வந்து விடும். ஆனால் தலையை வெட்டி எடுத்துச் செல்வது என்பது போர் புரியத் தூண்டும் குற்றத்தை விடக்  கடுமையானதாகும்.

இந்தியப் பிரமா் மன்மோகன் சிங்கும் ராணுவத் தளபதி விக்ரம சிங்கும் மிகச் சரியாகவே பதிலடி கொடுத்திருக்கின்றனா்.

இந்த அராஜகத்திற்குப் பிறகு பழயை நிலையில் பாகிஸ்தானுடனான இந்திய உறவைத் தொடர முடியாது என்று பிரதமர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

போர்க் குற்றம் என்பது வேறு. கொலைக் குற்றம் என்பது வேறு. போர் வீரன் கொலை வெய்வது சாதாரண மனிதன் செய்யும் கொலைலய விடப் பன்மடங்கு தண்டினைக் குரியதாகும் என்றார் விகரமசிங்.

இப்போது பாகிஸ்தானில் சிலவும் உள்நாட்டுக் குழப்பத்தை திசை திருப்பும் நோக்கிலேயே அந்நாட்டு ராணுவம் இந்த அக்கிரச் செயலில் ஈடுபடுவதாகவே படுிகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக இருக்கும் அந்நாட்டு மக்களின் கோபத்தை இந்தியாவின் பக்கம் திருப்பி விட்டால் ராணுவப் புரட்சி என்ற அவா்களின் நோக்கம் எனிதில் நிறைவேறும். அதோடு வெறிகொண்டு அலையும் இஸ்லாமியத் திவிரவாதிகளையும் தங்களின் பஙு்குதாரராய் இணைத்துக் கொள்ளலாம்.

மதம் என்ற வகையில் இஸ்லாம் நோ்மையானது. ஆனல் அதைக் கடைப்பிடிப்பவா்கள் அறியாமை வயப் பட்டு அம்மதத்துக்கு விரோதமாய்ச் செயல் படுகின்றனா். மத அறியாமை வெகுஜன விரோதத்தில் மையமிட்டு நிற்கிறது. ஷரியத் சட்டத்தின் வழியே ஆட்சி செய்யும் நாடுகளின் ராணுவங்களும் தீவிரவாதிகளும் இவ்விதமாகவே வெகுஜன விரோதிகளாய் மாறுகின்றனா்.

பொருளாரார ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் உணர்ச்சிகளற்ற உணர்வு ரீதியான சிந்தனாஞானம் வலுப் பெறும் போதுதான் இப்படிப் பட்ட அநியாய ஆக்கிரமிப்புக்களும் கொலைகளும் தவிர்க்கப் படும்.

17-1-2013

No comments:

Post a Comment