Thursday, 10 January 2013

ஜனநாயக சக்கரவா்த்திகள்.

     தொடர் வண்டிக் கட்டணங்களை உயர்த்தி அரசாணை வௌியிட்டிருக்கிறது மத்திய அரசு. பயணிகள் கட்டணம் இருபது விழுக்காடு உயர்த்தப் படடுள்ளது. இ்ந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன. அடிக்கடி ரயில் பிரயாணம் செய்பவா்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தக் கூடியது. பெரும் முதலாளிகளுக்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் சலுகைகளை வாரி வழங்கும் அரசு சாதாரண ஜனங்களுக்குப் பொருளார தண்டனையை அடிக்கடி வழங்கிக் கொண்டே இரு்ககிறது.

      ஏற்கனவே ஆளுங்கட்சியாய் இருந்து இதே வேலையைச் செய்துொண்டிருந்த பி ஜே பி உட்பட எல்லாக் எதிர்க் கட்சிகளுமே (தி மு க தவிர)   எதிர்ப்புத்  தெரிவித்துள்ளன. ஆச்சர்யம் என்னவென்றால் ஆ தி மு க மிகக் கடுமையாகச் சாடி இருப்பதுதான்.

     ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்ற மறு வாரமே 100 விழுக்காடு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. தேனியில்இருந்து மதுரை செல்ல 21 ரூபாய் என்றிருந்த கட்டணம் 42 ரூபாய் என்று ஆக்கப் பட்டது. 100 விழுக்காட்டுடன் ஒப்பிடும் போது 20 வடிழுக்காடு மிகவும் குறைவு.

     கட்டண ஏற்றத்தின் பொருளாதார அராஜகவாதக் கட்சிகள் காங்கிரஸும் அதிமுகவும். ஒப்பீட்டளவில் காஙகிரைஸை அதிமுக மிஞ்சிவிட்டது. அது ரயில் கட்டண உயர்வை வரவேற்றிருக்க வேண்டும்.  அல்லது இன்னும் பத்தாது என அறிக்கை விடுவதுதான் யதார்த்தமானதாய் இருக்கும். இந்தக் கட்டண உயர்வை விமர்சித்திருப்பது தமிழ் மக்கள் ஏமாளிகள் என்றோ முட்டாள்கள் என்றோ கணித்திருப்பதன் உச்சம் என்றே நான் கூறுவேன்.

     வாழ்க ஜனநாயக யுகத்தின் சாம்ராஜ்ய சக்கரவா்த்திகள்.

ஜனவரி 10 2013

1 comment: