பனையடியானைச் சந்திக்கச் சென்றேன். அவன் கொத்துப் பிடித்து வேலை செய்யும் விவசாயக் கூலித் தொதுிலாளி. அவன் வந்து என்னை சந்தித்து வேலை கேட்டு மண்டியிடும் காலம் போய் அவனை நான் வலியச் சென்று சந்திக்கும் காலம் வந்துவிட்டது. அமானுஷ்ய வௌியில் என் வருத்தத்தைப் பதிவு செய்தபடி பைய நடந்தேன். ஒரு பரவலில் களையெடுக்க வேண்டும். இன்னொன்றில் கதிரறுக்க வேண்டும். வேறொன்றில் காய் பறிக்க வேண்டும்.
அவன் சில நிபந்தனைகளை விதித்து விட்டு வேலை செய்ய ஒப்புக் கொண்டான். வேலை தருவதும் கூலி தருபவனும் நான். நிபந்தனை விதிப்பது அவன். காலக் கொடுமை.
தோட்ட வௌியில் கிணறு வெட்டி சிறு கட்டிடம் ஒன்று கட்ட வேண்டும். மண்ணாங்கட்டியைப் பார்க்கப் போனேன். சரிநிகா் சமானமாய்க் கலவையிட்டு துல்லியம் பிசகாத நேர்த்தியுடன் கட்டுவதில் வல்லவன். அவனும் நிபந்தனைகளோடுதான் ஏற்றுக் கொண்டான்.
சலவையாளி என் வீட்டுக்கு வந்து அழுக்கு எடுத்தது போக இன்று அவன் இருக்கும் இடம் தேடிச் சென்று அழுக்குச் சுமையை இறக்குகிறேன். விலாசமிட்டு முன் கூட்டியே பணமும் கேட்டு வாங்கிக் கொண்டு தேதி குறிப்பிட்டு வந்து வாங்கிக் கொள்ளச் சொல்கிறான். காலையில் வந்து அழுக்கெடுத்து மாலையில் வௌுத்துத் தந்தவனின் குரல்முன் என் குரல் ஊமையாகிப் போனது.
பெருமூச்சொன்று பீறிடுகிறது என் போன்றவா்களை வஞ்சித்தபடி கலிகாலம் கடந்து போகிறது. எல்லா ஆணைகளும் என் காலடி நிழலில் இருந்து துவங்குவது போய் பல திசைகளில் இருந்தும் ஆணைகள் எகுறி வந்து என் கழுத்து மென்னியைப் பிடிக்கின்றன.
நானும் என் போன்றவா்களும் ்கூலிக்கு ஆள் கிடைக்கல. கூலி கொடுத்து கட்டுபடியாகல என்று கூப்பாடு போட்டும் பயனேதும் விளைய வில்லை.
காலம் வேறெங்கோ கிசை திரும்பி சென்று கொண்டிருக்கிறது. எதிர்காலம் என் போன்றவா்கள் கையில் இல்லை எனபது மட்டும் புரிகிறது. எல்லாம் அவா்களின் கையில். அண்டி வாழ்ந்த ஆண்டிகளின் கையில். உழபை்பு நெருக்கடி ஆண்டைகளை அழித்துவிட்டு பாட்டாளிகளை உயா்த்த்ப் போகிறது. வரலாற்று நதி இவ்விடத்தில் திசை திரும்பி வேறெங்கோ பயணிக்கப்போகிறது.
துவண்டு சரிகிறது என் ஆன்மா. தூர வௌிகளில் அன்றண்டாப் பட்சியைப் புறாக் கூட்டம் வளையமிட்டு வீழ்த்துகிறது.
11-2-2012

No comments:
Post a Comment