ஜூன் மாதம் அகில உலக தடகளப் போட்டிகள் சென்னையில் நடைபெற இருந்ததை தமிழ் நாடு அரசு ரத்து செய்துள்ளது. பிரபாகரனின் 12 வயது சிறுவன் பாலச்தந்திரன் கடும் சித்திரவதைக்குப் பின் கொலை செய்யப் பட்டதை சேனல்4 அம்பலப் படுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. பாலச் சந்திரன் கொலை தமிழ் நெஞ்சங்களை ரத்தக் கண்ணீா் வடிக்கச் செய்யக் கூடிய சம்பவம். இரண்டாவது உலக யுத்தத்தின் போது ஜப்பானியா்கள் சீனக் குழந்தைகளை இதே போல்தான் சித்திரவதை செய்து கொன்றார்னள். சீன சிறுவன் ஒருவனை உயிரோடு அறுத்து மருத்துிவப் பரிசோதனை நடத்திய கொடூரம் எல்லாம் நிகழ்நதிருக்கிறது. ஜப்பானியா்கள் செய்ததற்கு நிகரான சித்திரவதையை சிஙு்கள இனவாத அரசும் செய்திருக்கிறது் ஆகவே இந்த நடவடிக்கை சரிதான் என்று தமிடிகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டன. அதிமுக எது செய்தாலும் எதிர்ப்பது என்ற கொள்கை உடைய திமுகவும் கூட அதற்கு மறைமுகமான ஆதரவு தந்திருக்கிறது. காங்கிரஸ் மட்டும் இன்னும வாய் திறக்க வில்லை. திராவிடக் கட்சிகளோடு சி பி ஐ பார்வட் பிளாக் ஆகியவையும் மழுமனதோடு வரவேற்றுள்ளன.
ஆனால் சி பி ஐ (எம்) அதை நிராகரித்துள்ளது. மாநிலச் செயலாளா் ஜி ராமக் கிருஷ்ணன் பேசும்போது ராணுவம் என்பது வேறு, விளையாட்டு என்பது வேறு என்று பேசியுள்ளார்.
இதையும் கொஞ்சம் யோசிக்க வேண்டியுள்ளது. பரம எதிரியான பாகிஸ்தானை விளையாட அனுமதிக்கும் போது எல்லைப் பகுதியில்சதாசர்வ காலமும் இடைஞ்சல் படுத்திக் கொண்டிருக்கும் வங்க தேச விளையாட்டு வீரர்களை ஏற்றுக் கொள்ளும் போது இலங்கையை ஏன் நிராகரிக்க வேண்டும்? தமிழன் என்ற உணர்ச்சி நிலைக் கோட்பாட்டை விட்டுவிட்டு மனிதன் என்ற உணர்வு நிலைத் தாக்கத்தோடு பரிசீலித்தால் விளையாட்டுப் போட்டிகளை ரத்து செய்ய வேண்டியதில்லை என்பது புலனாகும்.
எத்தனையோ சிங்களா்கள் பாதிக்கப் பட்ட தமிழர்களைப் பாதுகாத்துள்ளார்கள் என்பதை பலரு வௌிப் படுத்தியுள்ளனா். சிங்கள மக்கள் நம் எதிரிகள் அல்ல. இலங்கை பாசிச அரசும் கொடுங்கோலன் ராஜபக்ஸவும்தான் மனிதகுல எதிரிகள். அவர்களை வேரறுக்க மனித நேயக் கோட்பாட்டாளர்கள் ஒன்றிணைய வேண்டும். சிங்கள முற்போக்குவாதிகளையும் இணைத்துக் கொள்ளவேண்டும்.
உணர்சிசிக்கும் உணா்வு்ககும் இடையிலான போராட்டத்தில் உணா்ச்சியை ஜெயிக்க வைத்துவிடக் கூடாது என்ற மார்க்ஸிஸ்ட் கட்சியின் நிலைபாடு சரியானதுதான் என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment