சாவேஸ் கொலை! ஆம் அ்பபடித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. நான்குமுறை அறுத்தெடுக்கப் பட்ட உடல்! மீண்டும் மீண்டும் கிழிபட்டு துவண்டு போனது. புற்று ஒரு கொடூர நோய்தான் என்றாலும் அதைக் குணப்படுத்த உடல் கிழிபடா மருத்துவம் இருக்கிறது. ரத்தம் உறிஞ்சா மருத்துவத்தைப் பயன் படுத்த முடியும். ரத்தம் உறி்ஞ்சியும் உடலைக் கிழித்தும் சாவேஸ் கொலை செய்யப் பட்டார்.
பெட்ரோலியம் உறிஞ்சும் போராட்டத்தைத் துவக்கிய அமெரிக்கா விடாப் பிடியான சாவேஸின் எதிர்ப்பால் நிலைகுலைந்து செயலற்று நின்று போனது. பிடல் கேஸ்ட்ரோவின் அடிவாைழயாய் முளைத்து ஆங்கார விருட்சமாய் வானுயா்ந்து நின்றார். அவரின் ஆவேச முழக்கத்தால் தங்கள் செல்வம் கொள்ளையடிக்கப் படுவதை உணர்ந்த அந்நாட்டு மக்கள் அவர் நிழலடிக் குரலாய் கம்பீரப் பட்டு நின்றனா். செல்வம் இருந்தும் வறுமைப் பட்டிருந்த நாட்டை வறுமைப் படலத்தை விலக்கி வைக்க மக்களுக்கு வழிகாட்டினார்.
அவரின் ஓயாத பணியும் உணர்வலை பீறிட்ட முழக்கமும் மண்ணடிக் குழியில் மறைந்து போனது.
மருந்தில்லா மருத்துவமும் உணவு வழிப் பயிற்சியும் புற்று நோயைக் குணப்படுத்தும். அறுவையற்ற வழித்தடத்தில் பயணித்து புற்று நோயாளிகளைக் காப்பாற்றுவோம். புற்று நோய் இல்லாத உலகத்தை உருவாக்க அறுவை இல்லா சிகிச்சையைக் கைக் கொள்வோம்.
7-3-2013 வியாழன்.
No comments:
Post a Comment