புதுக் கோட்டையில் காதல் சம்பந்தமான ஒரு விசாரணையில் மணமகன் கொலை செய்யப் பட்டது பரபரப்பானது. மதுரை நீதிமன்றத்தில் கொலையாளி முன்னிலைப் படுத்தப் பட்ட போது நீதிபதி கோபத்தோடு கேட்டார்.்என்ன இது கொடுமை? தமிழகத்தில் உள்ள கூலிப் படையினரின் எண்ணிக்கையை சமர்ப்பிக்கும் படி ஆணையிட்டார்.
ரவுடிகளும் கூலிக்குக் கொலை செய்பவா்களும் தமிழகத்தில் பதினாறாயிரம் போ் உள்ளனா். பெரும்பாலானவா்கள் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவா்ளை ஏதும் செய்ய முடியவில்லை.
ரவுடியிஸம் என்பது மனிதப் பகைமையின் குறியீடு. போட்டியும் பொறாமையும் அன்பு வரட்சியும் பொங்கித் ததும்பும் மனித உணா்ச்சிப் பிரவாகமும் ரவுடியிஸத்தை உருவாக்குகின்றன. பணம் உள்ளவன் கூலி கொடுத்து வன்முறையாளரை வாங்கி வைத்துக்கொள்கிறான். பணம் இல்லாதவன் பயந்து நடுங்கி அடிபணிகிறான். இப்படியானதொரு பொருளியல் மற்றும் பண்பாட்டு விகாரத்தின் வழியே ரவுடியிஸம் நிறுவப் படுகிறது. ஊழல் போ்வழிகள் அதை வளா்த்தெடுக்கினறனா். ஊழலில் முங்கிக் குளித்தபடி இருக்கும் அரசியல் தலைவா்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் பத்தாம் பசலி சமூகத்தை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தி வைத்துத் தங்களுக்கு துைண நிற்கவுமான ஏற்பாடாக இந்த ரவுடியிஸத்தைப் பராமரிக்கினனறனா்.
மதம் மொழி இனம் கடந்து மேல் தட்டு மாந்தா்க்கு ரவுடியிஸம் சேவை செய்கிறது. மனிதா்கள் அனைவரும் பொராளாதாராத்தாலும் அறிவுத் திறத்தாலும் சமநிலை அடையும் போது ரவுடியிஸம் காணாமல் போகக் கூடும்.
No comments:
Post a Comment